Monday, May 6, 2024
-- Advertisement--

என்னை தேசவிரோதியாக நீதிபதி கூறியிருப்பது தவறு..!!! நீதிமன்றத்தில் விஜய் வேதனை. முடியாத கார் விவகாரம்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் இருப்பவர். கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து இருந்தார்.

அந்த காருக்கு நுழைவு வரி அதிகமாக இருந்ததால் நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். பொதுவாக இதுபோல வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கார் வாங்குபவர்கள் நுழைவு வரி அதிகமாக இருப்பதால் ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் செல்வது வழக்கமே அதுபோல விஜய் தரப்பு தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கு நுழைவு வரி ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் புகழ் பெற்ற நடிகரான அவர் நுழைவு வரியை முறையாக செலுத்தியிருக்க வேண்டும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வரி தான் முதுகெலும்பு வரி செலுத்துவது என்பது கட்டாயமாகும் வரி என்பது நன்கொடை இல்லை என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து நடிகர்களை மக்கள் ரியல் ஹீரோவக பார்க்கிறார்கள் படங்களில் மட்டும் கருத்துக்களைச் சொல்லும் இவர் இதுபோன்று வரிகட்ட மறுக்கக்கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நீதிபதி.

நீதிபதியின் கருத்துக்கு பிறகு சில நாட்கள் கழித்து விஜய் இந்த வழக்கை மேல்முறையீடு செய்திருந்தார் இந்த வழக்கு 25 10 2021 இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது குற்றவாளி போல காட்டியுள்ளது.

நிலுவைத் தொகையான ரூபாய் 32 ,30 ,000 ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம்.

வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நுழைவு வரி செலுத்துவது இல்லை என்றும் வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்து இருப்பதாகக் கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள்.

கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்னை தேச விரோதியாக கூறுவது தவறு என் வழக்கு மட்டுமல்லாமல் சக நடிகர்கள் தனுஷ் சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் விஜய் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உள்ளார் வழக்கை விசாரித்த நீதிபதி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles