Friday, May 3, 2024
-- Advertisement--

வெளிநாட்டில் நடக்கும் விஜயின் தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது..!!! அடேங்கப்பா என்னா மாஸ்..!!!

தளபதி விஜய் ஒரே சைக்கிளில் தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் ஆங்கில நாளிதழ்களை கலக்கியவர். விஜய்க்கு ரசிகர் பட்டாளம் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆனால் சைக்கிளில் வந்து விஜய் வாக்களித்த புகைப்படம் மற்றும் வீடியோ இந்திய அளவில் டிரெண்ட் ஆனது மட்டும் அல்லாமல் டிவி சேனல்களை திறந்தால் விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றி விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த அளவிற்கு விஜய் எது செஞ்சாலும் பேசும் பொருளாக மாறிவிட்டது. விஜய் நேசிக்கும் கூட்டம் உலக அளவில் இருக்கிறது.

தனது ஜனநாயக கடமையை முடித்த விஜய் அன்று மாலையே நெல்சன் திலீப்குமார் இயக்கம் தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். விஜய் விமான நிலையத்தில் நிற்கும் புகைப்படங்கள் வெளியானது.

சமீபத்தில் அந்தப் படத்தின் ஹீரோயினான பூஜா ஹெட்ஜ் முதன்முதலாக ஜோடி சேர ஜார்ஜியா பறந்துள்ளார்.

ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது இன்று விஜய் படத்தின் சூட்டிங் ஜார்ஜியாவில் நடக்க கொண்டு இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் செம ஸ்டைலாக விஜய் கூலர் போட்டு நிற்பது போன்று புகைப்படம் இருந்தது.

இதனை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles