Sunday, November 10, 2024
-- Advertisement--

அறுவை சிகிச்சையை விஜயிடம் சொல்லாமல் செய்த SAC …!!! பதறி போன விஜய்..!!! SAC போட்ட உருக்கமான பதிவு..!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி. விஜய் படம் வெளியாகிறது என்றாலே தியேட்டர் ஓனர்கள் பெரிய சந்தோஷத்தில் இருப்பார்கள். குறிப்பாக விஜயின் சுமாரான திரைப்படங்களே பெரிய லாபத்தை திரை அரங்க உரிமையாளர்க்கு அள்ளிக் கொடுக்கும் அந்த அளவிற்கு விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை நோக்கி தான் மொத்த தமிழ் திரையுலகமே காத்து இருக்கிறது.பிரமாண்டமாக உருவாக்கி இருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கிறது அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படமும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது செம பிஸியாக இருக்கும் விஜய் இதற்கிடையில் தன்னுடைய வெங்கட் பிரபுவுடன் இணையும் அடுத்த படமான தளபதி 68 படத்திற்காக லுக் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்று இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து திரும்பிய விஜய் வந்த உடனே தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களை நேரில் சந்தித்து மனம் விட்டு பேசி இருக்கிறார். விஜய் தனது தந்தை எஸ்எஸ்ஐ சந்தித்ததற்கு முதல் காரணமே அவருடைய உடல்நிலை மற்றும் எஸ் ஏ சி அவர்களுக்கு செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சை தானாம்.

SAC அவர்களுக்கு இதயத்தில் பிரச்சனை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று டாக்டர் அறிவுரை கூறி இருகிறார்கள் உடனே எஸ் எஸ் சி தனது மனைவி சோபாவிடம் இந்த விஷயம் விஜய்க்கு தெரிய வேண்டாம் விஜய் தனது அடுத்த படத்தின் பணிக்காக அமெரிக்கா சென்று இருக்கிறார் உடனே திரும்பி விட்டால் அது தயாரிப்பாளருக்கு தர்மசங்கடம் ஆகிவிடும் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இதை சொல்லுகிறேன் என்று கூறி உள்ளார்.

அறுவை சிகிச்சை செய்யும் விஷயத்தை விஜய்க்கு சொல்லாமல் சிகிச்சை நடந்து முடிந்தவுடன் நான் நன்றாக இருக்கிறேன் எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். என்று தனக்கு நேர்ந்ததை ஒரு ஆடியோவாக வெளியிட்டார் SAC .

உடனே பதறிப்போன விஜய் அமெரிக்காவிலிருந்து பறக்க பறக்க சென்னை திரும்பி தனது தந்தையை பார்த்து நலம் விசாரித்து உள்ளார். தந்தையிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட விஜய் தனது அம்மா அப்பாவுடன் அருகில் அமர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார் விஜய்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய வைரல் ஆனது. என்ன தான் தந்தை மகனுக்கும் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் என்றும் தந்தை மகனை விட்டுக் கொடுப்பதில்லை, மகன் தந்தையை விட்டுக் கொடுக்கவேமாட்டார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்தது. அப்பா மீது விஜய்க்கு பெரிய மரியாதை உண்டு சில வருடங்களுக்கு முன் SAC முடித்த சில முடிவுகள் தான் விஜய்க்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது மற்றபடி தனது தந்தையை என்றும் மறக்கமாட்டார் விஜய் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானாவர்கள் சிலர்.

விஜய் சந்திப்புக்கு பிறகு விஜய் மக்கள் இயக்க பொது செயலர் புசி ஆனந்த் அவர்கள் இன்று எஸ் சி சந்திரசேகர் அவர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து விஜயின் தந்தை மற்றும் தாயுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை x செயலியில் பதிவிட்டு உள்ளார் SAC

அதில் பிள்ளைகள் ஒன்று சேரும் போது பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது.🙂🙂 என்று பதிவிட்டு உள்ளார் SAC .

இந்த சம்பவம் விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles