Thursday, May 2, 2024
-- Advertisement--

பெண்கள் உடை குறித்து பேசிய விஜய்..!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் மாஸ்டர். கொரோனாவிற்கு பிறகு திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக பார்க்க வந்த ஒரே படம் அதுமட்டுமல்லாமல் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான முதல் படம்.

கலவையான விமர்சனங்களை கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைகள் படைத்து வந்தது. திரையிட்ட மூன்று நாட்களிலேயே மாபெரும் தொகையை வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தது.

விஜயின் மார்க்கெட் படத்துக்குப்படம் உயர்ந்து கொண்டே போக விஜய் மறுபடியும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது ரசிகர்களின் அன்பு கோரிக்கை வைத்து வந்தனர். மீண்டும் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்ற செய்திகளும் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருந்தது.

மாஸ்டர் விஜய் இந்த படத்தில் JD என்ற கதாபாத்திரத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்திருப்பார். படத்தின் நீளம் காரணமாக நிறைய நல்ல காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. நீக்கப்பட்ட காட்சிகளை நேற்று அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

நீக்கப்பட்ட ஒரு காட்சியில் பெண்களுக்காக விஜய் பேசிய ஒரு வசனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் சார் பொண்ணுங்க போடுற ட்ரெஸ்ஸயே குறை சொல்லிக்கிட்டு இருப்பீங்க. பெண்களின் உடை பற்றி தப்பாய் பேசும் அனைவருக்கும் இந்த காட்சி பதிலடியாக அமைந்தது.

இந்த காட்சியை ஏன் படத்தை விட்டு நீக்கினார்கள். இது போன்ற நல்ல கருத்துள்ள காட்சிகள் தான் மக்களிடம் போய் சேர வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மாஸ்டர் படத்தின் நீளம் மூன்று மணி நேரம் அதில் இந்தக் காட்சியும் வைத்தால் இன்னும் நீளமாக இருக்கும் என்பதனால் படத்தில் எடுக்கப்பட்ட நிறைய காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles