Monday, May 6, 2024
-- Advertisement--

தளபதி விஜயை ஒரே படத்தில் பின்னுக்கு தள்ளிய சூர்யா..!!! வெளியான அதிகாரபூர்வ தகவல்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அதுமட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வசூல் சக்கரவர்த்தி என்று சொல்லலாம் அந்த அளவிற்கு இவருடைய திரைப்படங்கள் வெளியாகும்பது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படை எடுப்பார்கள்.

சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பெரிய பலமே ஃபேமிலி ஆடியன்ஸ் தான் சூப்பர் ஸ்டாருக்கு பிறகு ஒரு நடிகருக்கு பேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் அதிகம் என்றால் அது கண்டிப்பாக விஜய் ஆகத்தான் இருக்க முடியும் விஜய் படங்களில் நகைச்சுவை சென்டிமெண்ட் காட்சிகள் ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசை இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து ரசித்து வருகிறார்கள்.

விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்றாலோ அல்லது அந்தப் படத்தின் டீசர் வெளி வந்தாலும் பல ரெக்கார்டுகளை முறியடித்து புதிய ரெக்கார்டு ஒன்றை செட் செய்வார்கள் விஜய் ரசிகர்கள் அந்த அளவிற்கு மாஸாக இருக்கும் விஜய் கொரோனா காலகட்டம் என்பதினால் மாஸ்டர் திரைப்படத்தை பல OTT தளங்கள் கேட்டும் திரையரங்கில் தான் வெளியிடுவேன் என்று பிடிவாதமாக இருந்து திரையரங்கில் வெளியிட்டார் விஜய்.

ஒரு காலகட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் நொந்து போயிருந்த நேரத்தில் மாஸ்டர் வந்து ஒரு பெரிய திருப்பத்தை தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொடுத்தது மாஸ்டர் படம் பெரிய ஹிட் படம் மட்டுமல்லாமல் வசூலை அள்ளி குவித்தது.

சூர்யா கொரோனா காலகட்டம் என்பதினால் மக்கள் தியேட்டருக்கு வந்தால் அவர்களுக்கு நோய்த் தொற்று வர வாய்ப்பு இருக்கும் என்று எண்ணி தனது சூப்பர் ஹிட் படமான சூரரைப்போற்று படத்தை ஓட்டி தளத்தில் வெளியிட்டார் அந்த படம் OTT தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அதனைத்தொடர்ந்து அமேசான் OTT தளத்திற்கு தொடர்ந்து நான்கு படங்கள் சைன் செய்த சூர்யா தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படத்தை அமேசான் OTT தளத்தில் வெளியிட்டது. ஜெய் பீம் திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரிய மைல் கல்லாக அமைந்தது.

ராசாக்கணு என்பவர் எந்த ஒரு தவறும் செய்யாமல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்ற உண்மை கதையை உலகம் முழுவதும் கொண்டு சென்றது ஜெய்பீம் ஆனால் ஒரு சில இடங்களில் வன்னியர் சமுதாயத்தினை தாக்கும் படி காட்சிகள் இருப்பதாக அலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சூர்யா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் இல்லை என்றால் அவரை விட மாட்டோம் என்று அச்சுறுத்தியும் வந்தார்கள். சிலர் சூர்யாவை உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் தருகிறேன் என்று அறிவித்தார்கள் ஜெய் பீம் ஒரு பெரிய வெற்றியை பெற்றாலும் ராசா கண்ணு அவர்களின் மனைவி எங்கள் கதையை வைத்து சூர்யா நன்றாக சம்பாதித்து விட்டார் நாங்கள் இன்னும் கீத்து வீட்டில் தான் இருக்கிறோம் என்று பேட்டி கொடுத்தார்.

அதன் பின் சில தினங்களில் சூர்யா அவர்களுக்கு உதவி தொகை அறிவித்தார் ராகவா லாரன்ஸ் அவர்கள் ராசா கண்ணு அவர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்று கட்டித் தருவதாக நேரில் சென்று பார்வையிட்டு அறிவித்தார்.

மாஸ்டர் ஜெய்பீம் இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி படங்கள் ஆனால் மாஸ்டரை பின்னுக்குத் தள்ளியுள்ளது ஜெய்பீம் எதில் தெரியுமா கூகுளில் தேடப்படும் படங்களின் பட்டியலை வருட முடிவில் கூகுள் நிறுவனம் வெளியிடும் அதில் அதிக தேடப்பட்ட படங்கள் இதுதான் என்று ஒரு பட்டியல் கொடுப்பார்கள் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஜெய்பீம் திரைப்படமும் ஆறாவது இடத்தில் மாஸ்டர் திரைப்படமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் உள்ளது.

பிற மொழிப்படங்கள் வெளிவரும் கூகுளில் பட்டியலில் இரண்டு தமிழ் படங்கள் இடம்பற்றிருப்பது சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் பெருமை தான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles