Friday, May 3, 2024
-- Advertisement--

விஜய் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்..!!! குஷியான விஜய் ரசிகர்கள்…!!!

தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தை வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பீஸ்ட் படத்தை பற்றியும் வசூல் பற்றியும் மனம் திறந்து பேசி இருந்தார். பீஸ்ட் படம் தோல்விப் படம் என்கிறார்கள் சிலர் ஆனால் எனக்கும் சன் பிக்சர்ஸ் இருவருக்கு மட்டும் தான் பீஸ்ட் எவ்வளவு கலெக்ட் செய்தது என்ற உண்மை தெரியும் என்ன பொருத்தவரையில் பீஸ்ட் கமர்ஷியல் பெரிய வெற்றிப்படம் தான் என்று கூறியிருந்தார்.

thalapthy66

தற்பொழுது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கிவரும் தளபதி66 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய். ஐதராபாத்தில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு யோகி பாபு, சங்கீதா கிரிஷ் என்று ஒரு பெரிய பட்டாளமே நடிக்கிறார்கள். குடும்ப சென்டிமென்ட் படமாக இந்தப் படம் அமையும் என்றும், விஜய்யின் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதையாக வந்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தளபதி 67 படத்தை இயக்கப்போவது லோகேஷ் கநகராஜ் அவர்கள் தான். விக்ரம் படத்தை தற்போது இயக்கி ரிலீசுக்காக காத்திருக்கும் லோகேஷ் நேற்று நடந்த பிரபல மீடியா ஒன்றின் அவார்ட் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது லோகேஷிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தளபதி 67 படத்தின் அப்டேட் பற்றி சொல்லுங்க என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே அது விக்ரம் ரிலீஸ் ஆகிய சில வாரங்களில் வரும் என்று பதிலளித்தார் படம் எப்படி இருக்கும் மாஸாக இருக்கமா இல்லை கிளாஸ் ஆக இருக்குமா என்று தொகுப்பாளர் கேட்டதற்கு மாஸும் கிளாஸும் படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் ஏற்கனவே மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது. மீண்டும் விஜயுடன் இணையும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles