Friday, May 3, 2024
-- Advertisement--

பிறந்தநாள் தினத்தில் ரஷ்மிக்காவிற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!!! சந்தோஷத்தில் நடிகை..!!!

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் விஜய்யின் 66 படத்தை இயக்குனர் வம்சி அவர்கள் இயக்குகிறார். இவர் தெலுங்குவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தமிழில் தோழா என்ற நல்ல படத்தை கார்த்தியை வைத்து எடுத்து வெற்றியும் கண்டார்.

தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் நடித்து வரும் விஜய் வித்தியாசமான கதை ஒன்றை பண்ண வேண்டும் என்று நிறைய கதைகளை கேட்டு வந்தார். அப்போது வம்சி சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போக தெலுங்குவில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். விஜயின் மார்க்கெட் கேரளாவில் கொடிகட்டி பறக்கும் இந்த நேரத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மூலம் தெலுங்குவிலும் பெரிய மார்க்கெட் உருவாக்க இந்த படம் பெரிய வாய்ப்பாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பா மகள் உறவினை மையமாக வைத்து உருவாகும் இந்த கதை விஜய்யை ஒரு புதிய பரிமாணத்தில் காட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது படக்குழு.

இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பவர் யார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வந்தது இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது தளபதி 66 படக்குழு.

தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா விஜயுடன் எப்படியாவது நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருந்த நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளன்று இந்த இந்தச் செய்தியை கொடுத்துள்ளது சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள் படக்குழுவினர்.

இந்த செய்தியை அறிந்த ராஷ்மிகா இது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசாக என்ன இருக்க முடியும்? என்று பதிவிட்டு உள்ளார்.

கூடுதல் தகவல் தளபதி 66 படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles