பிரபல இயக்குனர் சித்திக் மரணம். மலையாள சினிமாவில் நல்ல நல்ல படங்களை எடுத்து தனக்கென்று ஒரு பெரிய இடத்தை வைத்திருந்தவர். தளபதி விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படமான பிரண்ட்ஸ் திரைப்படத்தை இயக்கியது சித்திக் அவர்கள்தான் அவர் எடுத்த பிரண்ட்ஸ் திரைப்படம்
தமிழில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் செய்தது. விஜயின் ஐம்பதாவது படமான சுறா திரைப்படம் தோல்வி திரைப்படமாக அமைந்ததால் விஜய் நல்ல கதை கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்று பல கதைகள் கேட்டு வந்தார் கடைசியில் சுறா படத்திற்கு பிறகு சித்திக் அவர்களின் காவலன் திரைப்படத்தில் நடித்து இருந்தார் விஜய்.
அந்த படம் நீண்ட நாட்களுக்கு பிறகு vintage Vijay -ஐ பார்த்தது போல் இருந்தது. காவலன் திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக விஜய்க்கு அமைந்தது.
விஜய்க்கு ஆஸ்தான இயக்குனர்களின் சித்திக் அவர்களும் ஒருவர். சித்திக் அவர்களுக்கு வயது 68 திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் நேற்று அவரது உடல்நிலை சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ள செய்தி வந்து கொண்டு இருந்தது.
உடல்நல குறைவால் இன்று சித்திக் அவர்கள் காலமானார் இந்த செய்தி கேட்ட திரை உலகத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.