Friday, May 3, 2024
-- Advertisement--

சைக்களில் வந்து வாக்களித்த விஜய்..!!! தனது ஆதரவை சிம்பாலிக்காக தெரிவித்தாரா..? வெளியான உண்மை இதோ.

தளபதி விஜய் இவருக்கு உள்ள ரசிகர் பலத்தை பற்றி சொல்லவே இல்லை தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜயின் படங்கள் என்றால் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்து பார்த்து வருகிறார்கள் இன்று வரை. விஜய் பொருத்தவரை சமீபகாலமாக தனது படங்களில் சமூக அக்கறை கொண்ட கருத்துகளை எடுத்துக் கூறி வருகிறார்.

ஜிஎஸ்டி பற்றி மெர்சல் படத்தில் தைரியமாக பேசினார் அதற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட நபர்களால் பாஜகவிலிருந்து குடைச்சல் கொடுக்கப்பட்டது. மெர்சல் படத்தை திரையிடக் கூடாது என்றெல்லாம் எதிர்ப்புகள் தெரிவிக்க ஆரம்பித்தார்கள் அதன்பின்தான் மெர்சல் படம் பெரிய விளம்பரத்தை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அதனைத் தொடர்ந்து விஜய் படங்களுக்கு சில எதிர்ப்பை கிளப்பி வந்த பாஜகவினர் நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு விஜய் படத்தின் சூட்டிங் நடக்கக்கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர் இதனால் விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவின் இருக்கும் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென்று நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை ரெய்டு நடத்த வேண்டும் என்று படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்கள் வருமான வரித்துறையினர்.

இது ஒருபுறமிருக்க தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க நீலங்கரை யுனிவர்சிட்டி பள்ளிக்கு தனது வாக்கினை செலுத்த வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டார் விஜய். அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி அவருடன் அணிவகுப்பாக வாக்குச்சாவடி வரை வந்தனர். தன் ஓட்டை பதிவு செய்வதற்காக சைக்கிளில் விஜய் வந்ததை பல டிவி சேனல்கள் விவாதம் நடத்தி வந்தனர். அதில் விஜய் பெட்ரோல் டீசல் விலைவாசி அதிகமாக இருப்பதால் எதிர்ப்பு தெரிவித்து சைக்கிளில் சிம்பாலிக்காக வந்து தனது ஓட்டை பதிவு செய்திருக்கிறார் என்று பேச தொடங்கினர்.

வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த அவரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். அவரது வாக்கை பதிவு செய்துவிட்டு மறுபடியும் சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்ல இருந்தார் அப்பொழுது கட்டுக்கடங்காத அவரது ரசிகர்கள் கூட்டம் இருந்ததால் எவ்வளவு முயற்சி செய்தும் வெளிவர முடியவில்லை அதனால் அவரது சைக்கிளை அவருக்கு தெரிந்த அவரிடம் கொடுத்துவிட்டு ரசிகர் ஒருவருடன் ஸ்கூட்டியில் ஏறி சென்றார் விஜய்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பற்றி விவரங்களை கொடுத்து வந்த ஊடகங்கள் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த பின் அவரைப் பற்றி தமிழ் ஊடகம் முதல் ஆங்கில ஊடகம் வரை செய்திகள் வைரலானது.

ஏன் விஜய் சைக்கிளில் வந்தார் என்பதை அவரது மேனேஜர் ஒருவர் கூறியுள்ளார். விஜய்யின் வாக்குச்சாவடியில் பார்க்கிங் வசதி இல்லை என்பதினால் வாகனங்கள் எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்கு வரும்பொழுது கூட்ட நெரிசல் ஏற்படும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்தார் என்று கூறியிருக்கிறார். மற்றபடி வேறு வேறு எந்த ஒரு காரணமும் இதற்குப்பின் இல்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.

எது எப்படியோ விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது சில கட்சிகளுக்கு பெரிய விளம்பரமாக அமைந்தது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles