தளபதி விஜய் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றால் சந்தேகமே இல்லை இவர் தான். இவருடைய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. “சுறா” என்ற படம் வந்த போது விஜயின் கேரியர் அவ்ளோதான் அவருடைய மாஸ் அவ்ளோதான் என்றெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள். ஆனால் விஜய்க்கு திருப்புமுனையே அந்த படம். அந்த படம் வெளிவந்து பெரிய தோல்வியை சந்தித்தார் விஜய். அதன் பின் கமெர்ஷியல் படங்களில் கதையும் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னமோ அடுத்தடுத்து படங்களை கதைகளில் கவனம் செலுத்தி தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.
“துப்பாக்கி” என்ற படம் விஜயை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்து சென்றது. விஜய்யால் இப்படியும் நடிக்க முடியுமா என்று ஆச்சர்யப்படும் வகையில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து விவசாயிகளின் பிரச்சனையை “கத்தி” என்ற படத்தின் மூலம் கூறினார். “மெர்சல்” மூலம் இலவச மருத்துவம் அனைவர்க்கும் வேண்டும் என்ற கருத்தை வெளிக்கொண்டு வந்தார். இது போல தனது படங்களில் கமெர்ஷியல் விஷயங்கள் இருந்தாலும் கதைக்கு முக்கியதுவம் கொடுத்து வருகிறார்.

விஜயின் ரசிகர்கள் பலத்தை பற்றி சொல்லவே தேவை இல்லை அந்த அளவிற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மாபெரும் ரசிகர் படையை வைத்துள்ளார். அது மட்டும் அல்லாமல் ரஜினிக்கு பிறகு வெளிநாடுகளில் ஒரு நடிகர் படத்திற்கு பெரிய வரவேற்பு உள்ளது என்றால் அது விஜய் படம் தான்.
வருகின்ற ஜூன் 22 தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நற்பணிகள் செய்ய அவரது ரசிகர்கள் காலத்தில் இறங்கி உள்ளனர். அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டாம் என்று தளபதி விஜய் தரப்பில் இருந்து சில நாட்களுக்கு முன் ரசிகர் மன்ற தலைவர்களிடம் அறிவித்து இருந்தார்கள். மக்கள் இன்னும் கொரோனா பதிப்பில் இருந்து மீளவில்லை இப்போ பிறந்த நாள் கொண்டாட விருப்பம்மில்லை என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளார். விஜயின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அவரது ரசிகர்கள் அவரது பிறந்த நாள் தினத்தில் நற்பணிகள் செய்ய முடிவு எடுத்து உள்ளனர். சமூக வலைத்தளத்தில் இப்போவே hashtag கிரியேட் செய்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்கள் வடிவமைத்து நேற்று வெளியான COMMON DP ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இன்று திரை துறை நடிகர் மற்றும் நடிகைகளால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
