Tuesday, May 7, 2024
-- Advertisement--

மாலத்தீவில் மார்கமான உடையில் சுற்றிவரும் தளபதி விஜயின் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே..!!! வெளியான புகைப்படங்கள்.

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு பெரிய திருப்பத்தை கொடுக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற வாய மூடி சும்மா இருடா என்கின்ற மெலோடி பாடல் நல்ல பிரபலமானது பூஜாவும் மிக அழகாக இருப்பார்.

அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் வரவில்லை என்பதால் தெலுங்கு படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வந்தார் தெலுங்கு ரசிகர்கள் பூஜாவை தலையில் வைத்துக் கொண்டாட ஆரம்பித்தனர் அந்த அளவிற்கு பூஜாவின் மேல் பெரிய கிரேஸ் ரசிகர்களுக்கு இருந்தது.

காரணம் அம்மணி தெலுங்கு படத்திற்கு என்ன தேவையோ அதனை பக்காவாக கொடுத்தார் என்பது உண்மை. பாடல் காட்சிகளில் கவர்ச்சி ரொமான்டிக் காட்சிகளில் தாராளம் என்று பூஜா பலமாக தெலுங்கு மார்க்கெட்டை பிடித்துக்கொண்டார்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் அவர்களுடன் நடித்த வைகுண்டபுரம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது அந்தப் படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்தது. அல்லு அர்ஜுன் பூஜா போட்ட டான்ஸ் மூவ்மெண்ட் ரசிகர்களை கவர்ந்தது.

நெல்சன் டிலிப்குமர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் சாதனை செய்தது தற்பொழுது நெல்சன் டிலிப்குமர் அவர்கள் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் விஜய் ஆர்மியில் பணிபுரிந்த நபராக நடித்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்ட ஷாப்பிங் மாலில் இருந்து மக்களை எப்படி விஜய் காக்கிறார் என்பது கதை என்று அரசல் புரசலாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

பீஸ்ட் படம் காமெடி கலந்த ஆக்சன் படமாக இருக்கும் என்று நெல்சன் தரப்பு கூறிவருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பூஜா சம்பந்தப்பட்ட டூயட் காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது சில நாட்கள் ஓய்வில் இருக்கும் பூஜா ஹெக்டே தனது ஓய்வு நேரத்தை செலவழிக்க மாலத்தீவை நோக்கி படையெடுத்து உள்ளார் அங்கு உள்ள ரிசார்ட்டில் பூஜா அடிக்கும் லூட்டி அடேங்கப்பா.

மாலத்தீவில் மார்க்கமான உடை போட்டு சுற்றி வரும் பூஜா ஹெக்டே புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணி அங்கும் தாராளமாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles