Friday, May 3, 2024
-- Advertisement--

சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் வெளியாக இருக்கும் விஜயின் BEAST படத்தின் ARABIC குத்து பாடல்…!!! செம குஷியில் ரசிகர்கள். ப்ரோமோ இதோ.

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை எடுத்து வெற்றி கண்ட நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்பொழுது தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்நிலையில் டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பீஸ்ட் படத்தைப் பொறுத்தவரை தளபதி விஜய் ராணுவ வீரராக நடித்திருக்கிறார் இது துப்பாக்கி மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று தகவல்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் ஒரு ஷாப்பிங் மாலில் மாட்டிக்கொள்ளும் மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை ஒரே நாளில் நடக்கும் கதையாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்றை சென்னையில் போட்டிருந்தார்கள் படக்குழுவினர்.

டாக்டர் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பீஸ்ட் படத்திலும் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பீஸ்ட் படம் விஜய்க்கு ஒரு மாஸ் ஆன வித்தியாசமான படமாக இருக்கும் என்று ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் இந்த நேரத்தில் பீஸ்ட் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

அது என்ன சர்ப்ரைஸ் என்றால் தளபதி விஜயின் பீஸ்ட் பட முதல் பாடல் வருகின்ற FEB 14 தேதி வெளியிட உள்ளார்கள்.14 ம் தேதி வெளியிட இருக்கும் பாடலுக்கு ப்ரோமோ இன்று வெளியிட்டார்கள். அனிருத் நெல்சன் வழக்கம் போல தமாஷாக பேசிக்கொண்டு இருக்க பீஸ்ட் படத்தின் பாடல் எழுதிய சிவகார்திகேயனையும் அழைத்து விஜயிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள். அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன் பாடல் எழுத ARABIC KUTHU என்ற பாடல் பீஸ்ட் படத்தில் இடம் பெற உள்ளது.

இதோ அந்த ப்ரோமோ:

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles