தளபதி விஜய் இவருக்கு இருக்கின்ற ரசிகர் பலம் வேற எந்த நடிகருக்கும் இருக்காது அந்த அளவிற்கு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்து உள்ளார் விஜய். கொரோனாவிற்காக நடிகர்கள் தங்களது உதவி தொகையை கொடுத்து வந்தார்கள். விஜயின் சக போட்டியாளர் என்று கருதப்படும் தல அஜித் அவர்களும் நிதிஉதவி 1.25 கோடி கொடுத்தார். ஆனால் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தியும் நிதி உதவி பற்றி வெளியில் வரவில்லை. ஒரு சில பேர் இணையத்தில் அவர் வருமான வரி சொன்னதானியின் போது நடந்த மனசங்கடங்கள் தான் அவர் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்று கூறி வந்தனர்.
சமூக பிரச்சனை என்றால் ஒதுங்கி நிற்கும் நடிகர்கள் மத்தியில் துணிச்சலோடு மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே நடிகர் விஜய் தான். ஜல்லிக்கட்டு பிரச்சனை, நீட் தேர்வு , தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனைகளில் தலையிட்டு தனது கருத்தினை தெரிவித்து வந்தார். இன்று மக்களுக்கு கொரோனவாவால் இவளோ பெரிய பிரச்சனை வந்து கொண்டு இருக்கும் போது விஜய் நன்கொடை தராதது ஏன் என்றாலும் விவாதம் நடந்தது.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படம் வழியாக பதில் கொடுத்த சமந்தா..!!!
தற்பொழுது விஜய் அறிவித்துள்ள உள்ள நிதி உதவி அவரது ரசிகர்களை மட்டும் அல்ல மக்களையும் அதிர்ச்சிக்குள் ஆகியுள்ளது.
கொரோனா உதவித்தொகையை 1 .30 கோடியை 8 ஆக பிரித்து கொடுத்து இருக்கிறார். தனது உதவி தொகை அனைத்துமாநிலத்திற்கும் கிடைக்கும் படி செய்து உள்ளார்.
விஜயின் நிதி உதவி பற்றி முழுவிவரங்கள் இதோ.