Sunday, May 5, 2024
-- Advertisement--

தளபதி 67 படத்தின் டைட்டில் லியோ- ப்ளடி ஸ்வீட்.? படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு…!!!

தற்பொழுது தளபதி விஜய் 66-வது படமான வாரிசு நடித்து விட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்ததிலிருந்து சோசியல் மீடியா படு பிஸியாக உள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் படத்திற்கு படம் தனது மாஸை கூட்டிக்கொண்டே போகிறார். படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை புரிவதோடு அவருக்கான பேன் பாலோவும் எகிரி கொண்டே போகிறது.

சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் அஜித் நடித்த துணிவு, வாரிசு படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தளபதி 67 படத்திற்கு ரெடியாகிவிட்டார். இதை மாபெரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கமலை வைத்து விக்ரம் என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

இதுனை அடுத்து லோகேஷ் தளபதி விஜய் வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்று கேட்டதும் அதில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

அந்த வகையில் இந்த படத்தில் அர்ஜுன் நடிக்கிறார் என்பது அனைவரும் தெரிந்தது. மேலும் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா இருவரும் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. படத்தின் தலைப்பு லியோ என சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 67 படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சுற்றி ரத்தம் தெளிக்குமாறு ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles