Saturday, April 27, 2024
-- Advertisement--

விஜயின் தளபதி 66 படக்காட்சிகள் லீக்கானது…!!! ஸ்டைலாக இருக்கும் விஜய்..!!!

தளபதி 66 திரைப்படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரிக்கிறார். இந்தப் படம் தொடங்கியதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது காரணம் விஜய் எந்த ஒரு கதையைக் கேட்டாலும் கேட்டுவிட்டு சூட்டிங் செல்வது வழக்கமாக வைத்து இருப்பவர் அந்தக் கதையை பற்றியோ அல்லது இயக்குனர் பற்றியோ எதுவும் வாய் திறக்க மாட்டார் ஆனால் தளபதி 66 கதையை கேட்ட விஜய் இயக்குனர் வம்சி அவர்களிடம் கதையை கேட்டவுடன் இது போன்று கதையை கேட்டு 20 வருடங்கள் ஆகிறது இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று ஆர்வத்துடன் இருந்தாராம்.

விஜய் தற்பொழுது தளபதி 66 படத்தின் சூட்டிங் கோகுலம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. விஜய் குஷ்பூ ராஷ்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தளபதி 66 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஏகப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் லீக்காகி உள்ளது. இதனை கண்டு பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்கள் படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இதுபோன்று வீடியோக்கள் வெளியாவது சரியா என்று வருத்தத்தில் உள்ளனர்.

லீக்கான புகைப்படத்தில் விஜய் ஸ்டைலாக டீ சர்ட் அணிந்து கொண்டு அதன் மேல் சட்டையை திறந்துவிட்டு தலைவா ஸ்டைலில் இருக்கிறார் அவருடைய முகத்தோற்றம் மாஸ்டர் பீஸ்ட் படத்தில் உள்ளது போல இருந்தது.

இந்த படத்தில் குஷ்பூ முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் எடுத்து வருகிறார்கள் சூட்டிங் ஸ்பாட்டில் குஷ்பூ ராஷ்மிகா கேரவானுக்கு செல்லும் வீடியோக்கள் வெளிவந்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles