Friday, May 3, 2024
-- Advertisement--

விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே திடீர் உடல் நல குறைவு..!!! கொரோனா தொற்று உறுதி ஆனது..!!! அதிர்ச்சியில் படக்குழுவினர்கள்.

பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

பூஜாவிற்கு தமிழை விட தெலுங்கில் வரவேற்பு அதிகமாக கிடைத்ததால் தெலுங்கு படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அல்லு அர்ஜுனுடன் நடித்த வைகுந்தபுரமுளோ படம் அவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தப் படத்தில் வரும் புட்ட பொம்மா என்ற பாடல் தெலுங்கு மட்டுமல்லாமல் அனைத்து மொழி தரப்பினர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றதால் இவருக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

தற்பொழுது தளபதி விஜயை வைத்து நெல்சன் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் பூஜா. சமீபத்தில்தான் தளபதி 65 படக்குழுவினர்கள் அனைவரும் ஜார்ஜியாவில் இருந்து சென்னை வந்தடைந்தனர். நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை வந்த விஜய்யின் புகைப்படங்கள் ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பூஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் உடனே பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாகவும் அதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நான் தற்பொழுது மீண்டு வருகிறேன் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என்று கேட்டுக்கொண்டார் பூஜா ஹெக்டே. திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உள்ளார் என்பது படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles