Sunday, May 19, 2024
-- Advertisement--

தல அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!! நேரடியாக மோதும் தல தளபதி.

தல அஜித் தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் நடிகர். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லத்தனமான கதாபாத்திரம் என்றாலும் சரி தன்னுடைய நவரசம் கலந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். தல அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகி அஜித் சினிமா கேரியரில் பெரிய லாபத்தையும் மாற்றத்தை கொடுத்தது.

விவேகம் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் தல உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ் தயவு செய்து சிறுத்தை சிவா அடுத்த படத்தில் வேண்டாம் என்று கூறி வந்தார்கள் ஆனால் அஜித் சிவா மீது கொண்ட நம்பிக்கையால் அடுத்த படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து இயக்கச் சொன்னார்.

அஜித்தின் நம்பிக்கையை கொஞ்சமும் வீணாக்காத சிவா இயக்கிய விஸ்வாசம் அஜித்தின் சினிமா வரலாற்றிலேயே முக்கியமான படமாக அமைந்தது.

பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பேட்ட படத்துடன் விஸ்வாசம் படத்தையும் வெளியிட்டார்கள். பேட்ட படம் ஓரளவு சுமாராக இருந்தாலும் விஸ்வாசம் படம் நன்றாக இருந்ததால் வசூலை விஸ்வாசம் அள்ளிச் சென்றது.

தற்பொழுது அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வலிமையை வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள் படக்குழுவினர்.

போன பொங்கலுக்கு விஸ்வாசம் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது போல வலிமை இந்த பொங்கலுக்கு மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

இது ஒருபுறமிருக்க தளபதி விஜயின் பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை பீஸ்ட் படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டால் கண்டிப்பாக தல தளபதியின் பொங்கலாக தான் இந்த பொங்கல் நமக்கு அமையும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles