Sunday, May 19, 2024
-- Advertisement--

பைக்கிலே உலகம் சுற்ற தயார் ஆகும் தல அஜித் வெளியான தகவல்..!!! அஜித்தின் புதிய முயற்சி.

அஜித் நவரசம் கலந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். ரசிகர் மன்றங்களை கலைத்தும் இவரது படங்கள் வெளி வரும்போது ரசிகர்கள் இவர் மீது காட்டும் அன்பு வேறு எந்த ஒரு நடிகருக்கும் இல்லை. அஜித்தை பற்றி யாரிடம் கேட்டாலும் அவர் ஒரு ஜென்டில் மேன் என்று தான் சொல்வார்கள் அந்த அளவிற்கு அஜித் அனைவர் மனதிலும் இடம் பிடித்து உள்ளார்.

ரசிகர்கள் அஜித்தை தனது ரோல்மாடலாக நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அஜித்திற்கு சினிமாவைத் தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ் மீது அலாதி பிரியம் ஒரு நேரத்தில் சினிமாவையே விட்டு விட்டு கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்தார். அந்த நேரத்தில் அவருடைய படங்கள் எல்லாம் கடும் தோல்வியைச் சந்தித்தது.

சினிமா தான் பாதை என்று முடிவெடுத்தபின் அஜித் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.

தற்பொழுது ஹ வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் கிட்டத்திட்ட படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் விட்டு தனது நண்பர்களுடன் நீண்ட தூரம் பைக்கிலேயே பயணம் செய்து வந்தார். சமீபத்தில் கூட ஆக்ரா சென்று தாஜ்மஹாலை ரசித்த புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வந்தது.

அஜித் நேற்று டெல்லியில் 64 நாடுகளுக்கு தனியாக பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாரல் யஸார்லூவை சந்தித்து பயண அனுபவங்களை கேட்டறிந்தார்.

பெண்கள் பைக் ஓட்டுவது தனியாக ரைடு போவது ஒன்றும் புதிதில்லை ஆனால், ஈரான் போன்ற நாட்டில் பிறந்த பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதே குற்றமாகப் பார்க்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்துப் போராடியவர் மேரல் இவரிடம் பைக்கில் உலகம் சுற்ற டிப்ஸ் கேட்டுள்ளார் தல. சில மணி நேரங்கள் நடந்த சந்திப்புக்கு பின்பு பைக்கில் உலகம் சுற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles