Thursday, May 2, 2024
-- Advertisement--

மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் மகனுடன் விஜய்..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

தல அஜித் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தற்போதைய பெரிய தூண்கள். இவர்களது படங்கள் வெளியானால் தான் தியேட்டர் திருவிழா போல இருக்கும்.

வித்தியாசமான படங்கள் வந்தால் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் மற்றபடி ரஜினி,விஜய்,அஜித் இவர்கள் படம் வந்தால் மட்டுமே திரையரங்கில் கூட்டத்தை காண முடியும்.

விஜய், அஜித் படங்கள் என்றாலே மக்கள் நம்பி குடும்பத்தோடு வந்து படத்தை பார்த்து மகிழ்ந்து செல்வார்கள். விஜய், அஜித் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறார்கள் ஆனால் அவருடைய ரசிகர்கள் தான் சமூக வலைத்தளத்தில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் விஜய்யின் மனைவி சங்கீதாவும் அஜித்தின் மனைவி ஷாலினியும் நெருங்கிய நண்பர்கள். தனது ஓய்வு நேரத்தில் அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதுபோல விஜய் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அஜித் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு விஜய் வீட்டில் இருந்தும் சென்று கொண்டு தான் இருக்கிறார்களாம். அஜித் விஜய்க்கு தொழில் போட்டியை தவிர வேறு எந்த ஒரு ஈகோவும் இல்லையாம்.

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் குடும்பத்தினரும் அஜித் குடும்பத்தினரும் ஒன்றாக சந்தித்து ஓய்வு பொழுதை கழித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக் ஒரு நிகழ்ச்சிக்கு தனது அம்மா ஷாலினியுடன் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அஜித் போல செம ஹேண்ட்சம் ஆக இருந்தார் ஆத்விக்.

தற்பொழுது அந்த புகைப்படத்தை அஜித்தின் மகன் விஜயுடன் நிற்பதுபோல தத்துரூபமாக எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் ரசிகர்கள். அந்தப் புகைப்படத்தை பார்க்கையில் அச்சு அசல் அஜித்தின் மகன் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது போலவே இருந்தது. தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இது கற்பனை புகைப்படம் என்றாலும் இப்படி ஒரு புகைப்படம் வந்தால் அப்போது விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை இல்லாமல் இருப்பார்களா என்று கூறிவருகிறார்கள் இணையவாசிகள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles