Friday, May 17, 2024
-- Advertisement--

சாலையில் தனது நண்பர்களுடன் சைக்ளிங் சென்ற அஜித்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.

தல அஜித் தமிழ்நாட்டில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர். சினிமாவில் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு துணையும் இல்லாமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு தற்பொழுது தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். ரசிகர் மன்றம் வேண்டாம் என்று அதனைக் கலைத்தும் இவருக்கு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் உள்ளதை பார்த்து திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது.

ஆரம்ப காலத்தில் நடிகை ஹீராவை காதலித்து வந்தார் அஜித் குமார் தொடரும் என்ற படத்தின் சூட்டிங் போதுகூட அஜித் ஹீராவிற்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். என்ன காரணமோ தெரியவில்லை ஹீரா அஜித்தை பிரிந்தார். அதன்பின் நடிகை ஷாலினி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித். அஜித் வாழ்வில் ஷாலினி வந்தபிறகு அஜித்தின் படங்களும் ஏறுமுகத்தில் வெற்றி பெற்றது.

அஜித்தின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. சில பர்சனல் விஷயங்களால் துவண்டு இருந்த அஜித் ஷாலினியை திருமணம் செய்தபின் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். அஜித்திற்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.

அஜித்தின் படங்கள் வெளியாகப் போகிறது என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் . அஜித் சமீபத்தில் நடித்து கொண்டிருக்கும் வலிமை படத்தின் அப்டேட் ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் படக்குழுவினரும் விரைவில் அப்டேட் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அஜித் அவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவதற்காக கமிஷனர் ஆபீஸ் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

தற்பொழுது அஜித் தனது நண்பர்களுடன் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் சார் செய்யப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்களில் அஜித் சாலையில் சைக்கிள் ஓட்டி செல்வது போலவும், தனது சக நண்பர்களுடன் டீ அருந்துவது போன்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles