Sunday, May 19, 2024
-- Advertisement--

பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை..!!! ஆன்லைன் படங்களால் சுமை – 10 வகுப்பு மாணவி தற்கொலை.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகள் சுபிக்ஷா. மதுரை காமராஜர் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய தந்தை துபாயில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சுபிக்ஷா படிப்பில் மட்டும் இல்லை பேச்சு போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பல பரிசுகளை பெற்றவர்.

10 – ஆம் வகுப்பு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதால் தொடர்ந்து ஆன்லைனில் படித்து வந்த சுபிக்ஷா மொபைல் போனில் படிப்பதினால் தனக்கு கண் பிரச்சனை வருவதாக தனது தந்தையிடம் கூறி இருக்கிறார். உடனே சுபிக்ஷா தந்தை பெரிய டிவி ஒன்றை தனது அன்பு மகள் படிப்பதற்காக கொடுத்து உள்ளார். அந்த டிவியில் “Screen Mirroring” செய்து படித்து வந்து உள்ளார். இதற்கிடையில் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் 7,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்த நிலையில் 3000 கட்டணம் செலுத்தி புத்தகங்களை வாங்கி படித்து உள்ளார் சுபிக்ஷா மீதம் உள்ள 4000 தொகை நிலுவையில் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தினசரி பாடச்சுமை அவர்க்கு பெரிய சுமையாக இருந்து உள்ளது. பள்ளிகட்டணம் செலுத்தாமல் படிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து உள்ளார். தனது தம்பி மற்றும் குடும்பத்தினருடன் சகஜமாக பேசிக்கொண்டு இருந்த சுபிக்ஷா. வீட்டின் பின் புறம் உள்ள கழிப்பறையில் தூக்கு போட்டு கொண்டார்.

அந்த நிலையில் பார்த்த குடும்பத்தினர் கதறி அழுது கொண்டு சுபிக்ஷா வை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆன்லைன் படிப்பினால் 10 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுபிக்ஷா தமிழக முதல்வர் கையால் பேச்சு போட்டிக்கு பரிசு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles