Friday, May 3, 2024
-- Advertisement--

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை பார்த்து வியந்து போன தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண்..!!! ஸ்டாலின் ஆட்சியை உற்று நோக்கும் பிற மாநிலங்கள்.

மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எப்படி ஒரு நேரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பற்றி செய்திகள் இணையத்தில் உலா வந்ததோ அது போல தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பற்றி செய்திகள் தெலுங்கு மாநில செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை பற்றி பிற மாநிலங்கள் வியந்து பார்த்து வருகிறது குறிப்பாக மகளிர் பயணம் செய்ய இலவச பேருந்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பஸ் பாஸ் கொடுக்கும் வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

மு க ஸ்டாலின் அவர்களின் இந்த செயல்களை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவரான நடிகர் பவன்கல்யாண் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் கூறி உள்ளார் அதில் அன்பிற்குரிய தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும் ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கூடாது அதை வார்த்தைகளால் அல்ல செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.

உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டும் அல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று கூறி தமிழக முதல்வரை பாராட்டி உள்ளார் பவன் கல்யாண்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles