Wednesday, May 8, 2024
-- Advertisement--

கமலின் நடிப்பை பற்றி கருத்து தெரிவிக்க எனக்கு தகுதி இல்லை சூப்பர் ஸ்டார் போட்ட ட்வீட்…!!! விக்ரம் படத்தை பார்த்த பின் சொன்ன விஷயம்..!!!

உலகநாயகன் கமலஹாசன் நடித்து திரையரங்கில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக விக்ரம் திரைப்படம் பல கோடி ரூபாய்களை வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படம் 300 கோடியைத் தாண்டி வசூலித்த விட்டதாகவும் விரைவில் 500 கோடியை தொட வாய்ப்புகள் இருக்கும் என்று சினி வட்டாரத்தினர் கூறிவந்தனர்.

விக்ரம் கமலஹாசனின் கேரியரில் ஒரு முக்கியமான படம் வசூல் சாதனை புரிந்த படமாக அமைந்தது. விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கிய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. படத்தில் கமலஹாசன் என்ற ஒரு பெரிய ஸ்டாரை வைத்து படத்தை எடுக்கிறோம் அவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் அவருடன் சேர்ந்து நடித்த விஜய் சேதுபதி, பகத் பாசில் என்று மற்ற நடிகர்களுக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்தது விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம் அதுமட்டுமல்லாமல் சரியான ஆக்சன் படம் இல்லாமல் நீண்ட நாட்களாக இருந்த கமலுக்கு விக்ரம் தீனியாக அமைந்தது.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் விக்ரம் படத்தை இன்று பார்த்துள்ளார் படத்தை பார்த்துவிட்டு அவர் கூறியது விக்ரம் பிளாக்பஸ்டர் சினிமா ஒரு புதிய வயது வழிபாட்டு கிளாசிக் . இயக்குனர் லோகேஷ் விக்ரமின் முழு செயல்முறையும் உங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் மனதை நெகிழ வைக்கிறது பரபரப்பான விஷயங்கள் பிரதர்.

பகத் பாசில் மற்றும் விஜய்சேதுபதி இருவரின் நடிப்பும் இதைவிட சிறப்பாக செய்ய முடியாது. அனிருத்தின் மியூசிக்கல் ஸ்கோர் இது நீண்ட காலம் எனது பிளேலிஸ்டில் முதலிடம் ஆக இருக்கப்போகிறது என்று பாராட்டிய அவர்.

கமலஹாசன் சார் நடிப்பை பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை இருந்தாலும் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில் நான் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று பாராட்டியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles