Friday, May 3, 2024
-- Advertisement--

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மெகா ஸ்டார் சீரஞ்சீவி…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக பலரும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிற மாநிலத்தவர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் நேற்று பவன்கல்யாண் சமூக வலைத்தளத்தில் அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.கஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியிருந்தார். மேலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலினை பவன் கல்யாண் பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மெகாஸ்டார் சிரஞ்சீவி தமிழ்நாட்டு முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பில் சேப்பாக்கம் தொகுதி உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். இருவருடைய புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles