பல வருடங்களாக மாடலிங் துறையில் சிறந்து விளங்குபவர் அபிராமி . பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் இவர் விளம்பர படங்களிலும் பங்கு பெற்றுள்ளார்.
இந்நிலையில் அபிராமி சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்காகவும் பிக் பாஸில் நுழைந்தார்.
அங்கு வேறொரு நாட்டைச் சேர்ந்த முகேன் என்பவரை காதலிப்பதாக கூறினார். ஆனால் முகேனோ அபிராமி எனக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் எனக்கு வெளியில் காதலி உள்ளார் என்று கூறினார்.
இருப்பினும் அபிராமி முகேனை காதலிப்பதை நிறுத்தவில்லை. அதன் காரணமாகவே அபிராமி பிக் பாஸில் புகழ்பெற்றார். பிக் பாஸில் இருந்து வெளிவந்த கையோடு அபிராமி தல அஜித்துடன் நடித்த படமும் வெளியானது.
இந்த படத்தில் அபிராமிக்கு என்று நல்லதொரு பெயரும் கிடைத்தது. ஆனால் அதற்கு அடுத்து அவருக்கு சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை எனினும் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார் .
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அபிராமி அவ்வப்போது அவர் வெளியிடும் போட்டோக்களால் சர்ச்சைக்கும் உள்ளாவர்.
அந்த வகையில் சமீபத்தில் நடராஜர் உருவ சிலையை தன் முதுகில் டாட்டு குத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு யாரும் எந்த அறிவுறையும் கூற வேண்டாம் எனக்கு என் சிவனை எங்கு டாட்டு குத்த வேண்டும் என்பது தெரியும் என்றும் அதில் பதிவு செய்துள்ளார்.
அபிராமியின் இந்த டாட்டூ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் சர்ச்சைக்கு உள்ளாகியும் உள்ளது.