Wednesday, May 22, 2024
-- Advertisement--

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடை மூடல்…!!! சோகத்தில் குடிமகன்கள்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் 9.10.2021ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4.10.2021 காலை 10 மணி முதல் 6.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 7.10.2021 காலை 10 மணி முதல் 9.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யவும், மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப் பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது உரிய சட்ட மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு! அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles