Monday, May 20, 2024
-- Advertisement--

அஜித் ரசிகர்கள் பாலை திருட வாய்ப்பு இருக்கு எச்சரிக்கையாக இருங்கள் – தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க நிறுவனத் தலைவர்…!!!

அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது இந்நிலையில் பல தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கே வலிமை திரைப்படம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். திரையரங்கில் டிக்கெட் வாங்கி முதல் இரண்டு காட்சிகளுக்கு 350 முதல் 450 வரை டிக்கெட் விற்று வருகிறார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் வாங்கி கொண்டு செல்கிறார்கள்.

அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது ரசிகர்கள் மேளம் அடித்து ஆட்டம் பாட்டத்துடன் கட் அவுட்க்கு பாலபிஷேகம் செய்வது வழக்கம் இந்நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அவர்கள் அஜித் வலிமை பட கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் திருடப்படலாம் முன்னெச்சரிக்கையாக இருக்க சொல்லி பால் முகவர்களுக்கு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க நிறுவனத் தலைவர் கூறியது அன்பிற்கினிய பால் முகவர்களே வணக்கம்.


முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படம் வெளியாகின்ற திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் “முன்னணி நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம்” செய்கிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வீணாக்குவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.

உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும், “ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்” என்கிற முயற்சியில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதிப்பிற்குரிய நடிகர்கள் திரு. ரஜினிகாந்த், திரு. விஜய், திரு. அஜீத், திரு. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கவனத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை பதிவு தபால் மூலமாக கொண்டு சென்றதோடு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கும் சென்றிருக்கிறோம். கூட கொண்டு

அதுமட்டுமின்றி “உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்” என சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும், காவல்துறை அறிவுறுத்தி உள்ளோம்.

தலைவரிடமும் கடந்த காலங்களில் பலமுறை புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நம்முடைய கோரிக்கைகள் எவர் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. அத்துடன் “ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த மேற்கண்ட முன்னணி நடிகர்கள் எவரும் துளியளவு முயற்சிகளைக் கூட மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விசயமாகும்.


“நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுப்பதில் பால் முகவர்கள் சங்கத்திற்கு என்ன அக்கறை…?” நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம்
என பல தரப்பிலிருந்தும் வினாக்கள் எழுகின்றன.

முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள பால் ரசிகர்கள் பாலினை திருடிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளது என்பதை அனைவரும் நன்கறிவீர்கள்.

கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் திருடு போனால் நடவடிக்கை எடுக்க இயலாது என காவல்துறை தரப்பில் கைவிரிக்கப்பட்டதையும் நாம் ஏற்கனவே கடந்த காலங்களில் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்திருக்கிறோம்.

பால் முகவர்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு இதைத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles