Friday, April 26, 2024
-- Advertisement--

தமிழ்நாட்டில் அதிகம் வருமான வரி கட்டியது ரஜினி தான்..!!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு கிடைத்த விருது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய படங்களின் சாதனைகளை முறியடிக்க இவருடைய படங்களால் மட்டுமே முடியும் அந்த அளவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்காத ஒரு இடம் பிடித்தவர் தான் ரஜினிகாந்த்.

இவருடைய திரைப்படத்தில் அனைவரையும் ரசிக்க வைக்கும் காமெடி காட்சிகள், டூயட் காட்சிகள் மற்றும் நல்ல கதையம்சம் இருக்கும் அதனால் இவருடைய திரைப்படத்திற்கு மக்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது நான் பணம் புகழ் நிறைய சம்பாதித்து விட்டேன் பெரிய பெரிய அரசியல்வாதிகள் பார்த்து விட்டேன் ஆனால் எனக்கு நிம்மதி சந்தோஷம் 10% கூட கிடையாது என்று உருக்கமாக பேசியிருந்தார்.

புகழ் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகர் சந்தோசம் நிம்மதி இல்லை என்று கூறியது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசு சார்பாக விருது ஒன்று வழங்கப்பட்டது வருமானவரி தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விருது ஒன்றை வழங்கினார்.

ஆனால் இந்த விருதை பெற ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை அவருக்கு பதில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது தந்தையின் விருதை வாங்கிக் கொண்டார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles