Saturday, May 4, 2024
-- Advertisement--

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இணையதளம் அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை கலெக்டர் விஜயராணி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்ட இணையதளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்படும்.

அனைத்து திட்டங்கள் விபரம் அறிந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள், கல்வி உதவித்தொகை, சுயதொழில் வங்கி ,கடன் உதவி, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலர் சான்று, இலவச பேருந்து பயண சலுகை மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திடம் போன்றவற்றிற்காக விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் வகையிலும் சில திட்டங்கள் நேரடியாக இணையதளத்தில மூலம் விண்ணப்பிக்கும் வகையிலும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சட்டங்கள் சட்டவிதிகள் கல்வி வேலைவாய்ப்புமாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்துதல் அரசு பணியாளர் நலனுக்கான அரசாணைகள் வழிகாட்டுதல் ஆகியவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு பள்ளிகள் இல்லங்கள் சிறப்பு கல்வி நிறுவனங்கள் விவரங்களும் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் மூலம் தமிழ் மெட்ரோ ஆங்கிலத்தில் பார்வையற்றவர்கள் பேசும் கணினி மற்றும் செல்பேசியின் மூலம் அறியும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக தேசிய தகவல் அலுவலரால் இணையதள பகுதி ஏற்படுத்தப்பட்டு. http://chennai.nic.in/-Departments என்ற பகுதியில் ஆங்கிலத்திலும் http://chennai.nic.in/ta/ துறைகள் என்ற பகுதியில் தமிழிலும் சென்று பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles