Sunday, May 19, 2024
-- Advertisement--

தனது தந்தையின் பிறந்தநாள் தினத்தில் முதல்வர் அறிவித்த மக்களுக்கான அறிவிப்புகள் இதோ..!!!

கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது தந்தைக்கு நினைவஞ்சலி செலுத்தி நல திட்டங்களை துவக்கி வைத்தார்.

கலைஞரின் பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தென் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இரண்டு லட்ச சதுரடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகம் சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழ் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உயர் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

நகரப்புற அரசு பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பயணச் சலுகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles