வருடத்திற்கு உயர்கல்வியினை முடித்து வேலை தேடுபவரின் எண்ணிக்கை தான் அதிகரித்து கொண்டு இருக்கிறது. வேலைவாங்கி தருவதாக கூறி பணத்தை இழந்த பட்டதாரிகள் நம் நாட்டில் அதிகம். படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் சேர வேண்டும் என்று எண்ணி முகம் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். தனக்கு ஏற்ற வேலை காலியிடங்கள் எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மிக சிரமப்படுகின்றனர்.
இந்த சிரமத்தை போக்க தமிழக அரசு ஒரு தீர்வு கொண்டு வந்துள்ளது. https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளனர். இனி தனியார் நிறுவனர்களில் காலி பணியிடங்களை இந்த அரசு இணையதளத்தில் பதிவு செய்து தங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி வேலைதேடுபவர்கள் அவர்கள் படித்த படிப்பிற்கு பொருத்தமான வேலையில் சேரலாம். இந்த இணையதளத்தை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.