Sunday, April 28, 2024
-- Advertisement--

12 ஆண்டுகளுக்கு பின் அண்ணன் வீட்டுக்கு செல்லும் தம்பி…!!! உருகும் உடன்பிறப்புகள் ..!!!விபரம் உள்ளே.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை, மதுரை போன்ற இடங்களுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். இன்று மதுரையில் 12 ஆண்டுகளுக்குப் பின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி வீட்டுக்கு செல்கிறார். ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு மேல் மதுரை டி.வி.எஸ் நகரில் உள்ள அழகிரி வீட்டிற்கு செல்கிறார். 2009இல் திருமங்கலம் இடைத் தேர்தலின் போது மத்திய அமைச்சராக அழகிரி இருந்தபோது மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு ஸ்டாலின் சென்றார்.

உட்கட்சி மோதல் காரணமாக அதன் பின் அழகிரி வீட்டிற்கு ஸ்டாலின் செல்லவில்லை. தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் அதுவும் முதல்வராக ஸ்டாலின் அண்ணனை சந்திக்க வருகிறார். அவரிடம் வாழ்த்து பெற்றுவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இதுகுறித்து மதுரை மாவட்ட திமுக நிர்வாகம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படாமல் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் அமைதி காத்தனர்.

திமுக வெற்றி பெற்றதும் அண்ணன் என்ற முறையில் “என் தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் அவரைப் பார்த்து பெருமைப்படுகிறேன்” என்ன அழகிரி அறிக்கை வெளியிட்டார் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கும் அழகிரி குடும்பத்தினருக்கு அழைப்பு விடப்பட்டது. அதன்படி அழகிரி மகன் தயாநிதி மகள் கயல்விழி பங்கேற்றனர். கடந்த 6ஆம் தேதி இருவருக்கும் ஸ்டாலினின் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். அப்போது அழகிரி உடல் நலம் குறித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். அண்ணன் தம்பி இடையிலான அரசியல் பகையை முடிந்துவிட்டது என கூறியுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles