Sunday, April 28, 2024
-- Advertisement--

தமிழக முதல்வரே கண்ட்ரோல் ரூமுக்கு சென்று மக்களிடம் பேசியது என்னை வியக்க வைத்து உள்ளது முதல்வருடன் உரையாடிய பெண் பேட்டி..!!!

தமிழக முதல்வர் எம் கே ஸ்டாலின் அவர்கள் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார் ரூமிற்கு சென்று பார்வையிட்டார். அதிகாரிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று திடீரென்று வார் ரூமுக்கு சென்று விசிட் அடித்த முதல்வர் மக்களுக்கு அதிகாரிகள் எந்த அளவு சேவை செய்து வருகிறார்கள் என்பதை கேட்டறிந்தார்.

அந்த நேரத்தில் வார் ரூமுக்கு வந்த தொலைபேசி அழைப்பை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எடுத்துப் பேசினார் அப்போது ஒரு பெண் உதவி கேட்டு பேசியுள்ளார் அதற்கு பதிலளித்த ஸ்டாலினின் வீடியோ நேற்று இணையத்தில் வைரல் ஆனது இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பேசிய நுங்கம்பாக்கம் பகுதியை சார்ந்த அர்ச்சனா என்ற பெண் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் என் அத்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார் இந்நிலையில் உதவி கேட்டு அவருக்கு வார் ரூமுக்கு கால் செய்தேன் அப்பொழுது என்னுடைய அழைப்பை எடுத்த ஒருவர் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதை நாங்கள் செய்கிறோம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் அதற்கு எனது அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு பெட் வேண்டும் என்றேன்.

என்ன பெட் வேண்டும் என்று அவர் கேட்க டி இரண்டு வகைப் வேண்டும் என்றேன் உங்களுடைய அத்தை குறித்து மேலும் விவரங்களுக்கு வேண்டும் என்று கூறினார் அவர் பேசும்போது முகஸ்டாலின் பேசுகிறேன் என்று பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

சற்று ஆச்சரியம் அடைந்த நான் மறுபடியும் வார் ரூமுக்கு கால் செய்தேன் அப்பொழுது வேறொருவர் தொலைபேசியை எடுத்தார்கள் அவர்களிடம் சற்றுமுன் நான் கால் செய்தேன் அப்பொழுது என்னிடம் யார் பேசினார்கள் என்பதை கேட்டேன் அதற்கு அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தான் உங்களுடன் பேசினார் என்று கூறியவுடன் இந்த கடினமான நேரத்தில் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு முதல்வர் கன்ட்ரோல் ரூமுக்கு சென்று பொதுமக்களுடன் உரையாடியது என்னை வியக்க வைத்தது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பெட் கிடைப்பது சிரமமாக இருக்கும் இந்த நேரத்தில் முதல்வரே உறுதியளித்து என்னோடு பொறுமையாக பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற தலைவரை தான் மக்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles