Thursday, May 2, 2024
-- Advertisement--

உடன்பிறப்புகளே உணவின்றி தவிக்கும் பிறர் பசியாற்றுங்கள் கழகத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!!!

இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கும் ஊரடங்கிற்கு மக்கள் உரிய முறையில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஊரடங்கு நேரத்தில் உணவில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யக்கோரி உடன்பிறப்புகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் அதில் கொரோனவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று செய்தி வரும் நாள் தான் நான் பொறுப்பேற்ற நாளை விட மகிழ்ச்சியான நாள்.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்கிடவும் தான் ஊரடங்கு. ஊரடங்கு காலத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் உடன்பிறப்புகாளம் உங்களின் ஒரு துணையை எதிர்பார்க்கிறேன்.

தி மு கழகத்தினர் மக்களின் அடிப்படைத் தேவையான உணவினை வழங்கும் பணியில் ஈடுபடவேண்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று கொரோனா கால நெறிமுறைகள் உடன் செயல்பட வேண்டும்.

பேரிடர் காலத்தில் இருந்து முழுமையாக மீண்டிட முதலமைச்சர் பொறுப்பில் உள்ள நான் பணியாற்றுகிறேன் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் ஆன நீங்கள் பசியாற்றுங்கள் இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles