Friday, May 3, 2024
-- Advertisement--

நடைப்பயிற்சி சென்ற முதல்வரிடம் செம ஜாலியாக பேசிய பொதுமக்கள்..!!! சிரித்தபடி பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்…!!! வைரல் வீடியோ.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் செய்து மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறார். ஆட்சிக்கு வந்த முதல் நாளே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பேருந்து வசதி ஏற்படுத்தி அசத்திய முதல்வர் தொடர்ந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

தற்பொழுது நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி போராடி வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கூறி ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நேற்று தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் தேவைகளை சரியாக புரிந்துகொண்டு தமிழக முதல்வர் அதற்காக குரல் கொடுப்பதால் ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு பெரிய மரியாதை இருக்கிறது.

தனது பிஸியான நேரத்திலும் உடற்பயிற்சி சைக்கிளிங் வாக்கிங் என்று தனது உடல் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி இளைஞர்களுடன் சேர்ந்து சைக்கிளிங் செல்வது சைக்கிளிங் செல்லும் போது பொது மக்களை சந்திப்பது வழக்கம்.

அதுபோல இன்று காலை சென்னை அடையாறு தியோசஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். நடை பயிற்சி முடிந்தவுடன் அங்கு இருந்த பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடினர்.

அப்பொழுது அங்கிருந்த மக்கள் சார் உங்கள் கூட நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏர்போர்ட்டில் செல்பி எடுத்து இருக்கிறேன் அப்போவே நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறியிருந்தேன். உங்கள் ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யுறீங்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் இதுவே தொடரட்டும் என்று கோரிக்கை வைத்தனர் அதனைத் தொடர்ந்து புட்பால் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வெளிநாடு சென்றுள்ள உங்கள் பேரன் நல்லபடியாக ஜெயித்து வரவேண்டும் என்று கூறியிருந்தனர். பேரனை வழியனுப்ப நீங்கள் ஏர்போர்ட் சென்ற வீடியோக்களை பார்த்தோம் என்று மக்கள் கூறினார்கள் அதற்கு சிரித்தபடி முதல்வர் நின்றார் .

கடைசியாக ஒரு கேள்வி சேர எப்படி நீங்கள் இன்னும் மார்க்கண்டேயனாக ஆக இருக்கிறீர்கள் என்று அவர் கேட்க அதற்கு முதல்வர் டயட் கண்ட்ரோல் செய்கிறேன் என்று சிரித்தபடி கூறினார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடைபயிற்சி சென்ற முதல்வர் பொதுமக்களிடம் பொறுமையாக பேசிய வீடியோவை பார்த்த மக்கள் முதல்வரிடம் பேச இப்படி ஒரு சான்ஸ் நமக்குக் கிடைக்கவில்லையே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles