Thursday, May 2, 2024
-- Advertisement--

திமுக அமைச்சர்களுடன் மேடையில் பாஜக வானதி ஸ்ரீனிவாசனை அமர வைத்து கௌரவப்படுத்திய ஸ்டாலின்..!!! முதல்வருக்கு குவியும் பாராட்டுக்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று களத்தில் இறங்கி வேலை செய்தார் இன்று கோவை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

முதலமைச்சரின் எந்த ஒரு படமும் குறிப்பிடாமல் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் அவரது கையால் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அதிமுகவினர் வேண்டுமென்றே இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவை புறக்கணித்தனர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

முதலமைச்சர் வருகை தந்த விழாவிற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார். பார்வையாளர்கள் அமர்ந்து இருக்கும் சீட்டில் அமர்ந்திருந்த வானதி சீனிவாசன் அவர்களைப் பார்த்த முதல்வர் அவர்கள் மேடையில் வந்து அமருமாறு அழைத்தார் அதற்கு வானதி சீனிவாசன் முகத்தில் சிரிப்புடன் மேடையில் சென்று அமர்ந்தார்.

திமுகவிற்கு எதிர்க்கட்சி என கருதப்படும் அதிமுக தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் மற்றொரு எதிர்க்கட்சி என கூறிக்கொள்ளும் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் அவர்களை தமிழக முதல்வர் மேடையில் அழைத்து அமரச் சொல்லியது பலரையும் வியக்க வைத்தது.

என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் ஆன நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் நாகரிகம் என்று கூறி வருகிறார்கள் மக்கள்.

திமுக அமைச்சர்கள் அமர்ந்திருந்த வரிசையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் அவர்களை அமர வைத்து அதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles