Sunday, May 5, 2024
-- Advertisement--

கோவை மாணவி மரணம் வருத்தம் அளிக்கிறது குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் முதல்வர் முக ஸ்டாலின் உறுதி.

கோவை மாணவி மரணம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கோவையை சார்ந்த 17 வயது சிறுமி பொந்தராணி 11ஆம் வகுப்பு வரை சின்மய வித்யாலயா பள்ளியில் படித்து வந்து உள்ளார்.

திடீரென்று அந்த பள்ளியில் தான் படிக்க விரும்பவில்லை என்னை வேறொரு பள்ளியில் சேருங்கள் என்று கேட்டுக்கொண்டதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் அம்மணிம்மாள் என்ற பள்ளியில் வந்த பன்னிரண்டாம் வகுப்பு சேர்த்துள்ளனர் அவரது பெற்றோர்.

திடீரென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை சாத்திக்கொண்டு மின் வசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவி. தனது மகளை சடலமாக பார்த்த பெற்றோர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசாரும் விரைந்து வந்து அந்த மாணவியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் பெண்ணின் தற்கொலையை விசாரித்த காவல்துறையினருக்கு பிறகுதான் தெரிய வந்துள்ளது பல திடுக்கிடும் தகவல்கள். அந்த பெண் ஏற்கனவே படித்த பள்ளியில் physics ஆசிரியராக பணிபுரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.

இதனை அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறி பள்ளியின் தலைமைக்கு புகார் அளித்துள்ளார் ஆனால் பள்ளியின் நிர்வாகம் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுங்கள் வெளியே தெரிந்தால் பெயர் கெட்டுவிடும் என்று பெற்றோரை மழுப்பி உள்ளார் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர்.

பள்ளி மாணவி செல்போன் எண்ணிற்கு தொடர்ந்து மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் அந்த ஆசிரியர் இதனால் மனமுடைந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான நிலையில் இருந்திருக்கிறார் அப்போது அந்த மாணவி கடிதம் ஒன்று எழுதி விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த மாணவி எழுதிய கடிதத்தில் யாரையும் சும்மா விடக்கூடாது ரீட்டா ஓட தாத்தா எலிசா சாரோட அப்பா இந்த சார் யாரையும் சும்மா விடக்கூடாது என்று கடிதத்தில் எழுதியிருந்தார்

அந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அனைத்து தரப்பிலிருந்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வரும் போராட்டத்தில் இஸ்லாமிய சகோதரிகளும கலந்து கொண்டு வருகிறார்கள்.

தமிழக முதல்வர் இந்த சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர் இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று உறுதி அளித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles