Sunday, May 19, 2024
-- Advertisement--

கொட்டும் மழையிலும் அயராமல் பணி செய்து வரும் மாநகராட்சி பணியாளர்கள் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன் – முதல்வர் பழனிச்சாமி.

நிவர் புயல் இன்று கரையை கடப்பதற்கு முன்பே சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேகமான காற்றையும் வெள்ளப் பெருக்கையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் செல்லும்போது காற்றில் தகரங்கள் பறந்து விழுகிறது. ஏற்கனவே கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை மீண்டு வரவே பல காலங்கள் ஆகிவிட்டது அதன்பின் கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது அதனை தொடர்ந்து தற்போது நிவர் புயல் சென்னை மக்களை பீதி அடைய செய்துள்ளது.

மாமல்லபுரத்தில் 20 அடிக்கு மேல் ராட்சத அலை எழும்பி வருகிறது. இந்தப் புயல் மாபல்லபுரம் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், காவல் துறையினர்கள் மற்றும் மின் பணியாளர்கள் போன்றவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மழையில் நனைந்து கொண்டு மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் அயராத உழைப்பை பார்த்த முதல்வர் சிறப்பாக பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இயற்கை பேரிடர் காலங்களில் அயராது உழைக்கும் இவர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles