கொரோனா தற்காப்புக்காக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த ஊரடங்கினால் மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டாலும் கொரோனா நோய் கிருமி பரவாமல் காத்து கொள்ள இது சரியான வழி இது தான். இந்த நேரத்தில் நம்மை வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு தங்களது உயிர்க்கு பாதுகாப்பு இல்லாமல் உழைக்கும் காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த கடினமான நேரத்தில் அரசியல் செய்யாமல் நாம் நம் அரசுடன் ஒத்துழைத்தாலே போதும்.தனது வீட்டில் கொரோனா வந்து இறந்தவர்களின் உடலை கூட சரியாய் பார்க்க முடியாமல் போன பல சொந்தங்கள் நாடு முழுவதும் தவித்து வருகின்றனர். தயவு செய்து நமது இப்போது உள்ள நிலை கஷ்டம் தான் ஆனால் இப்படி உள்ளதால் தான் இந்த கொடிய நோயின் தாக்கம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக இருக்கிறது.
தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். இந்த நோயின் தாக்கம் நமக்கு செய்தி வழியாக தெரிந்தாலும் இந்த நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் நெஞ்சில் பாரத்துடன் கண்ணில் கண்ணீருடன் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா நோயின் தாக்கம் இருக்கிறது.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் ட்விட்டர் வழியாக தமிழக முதல்வரிடம் உதவி ஒன்றை கேட்டார். “ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை” உடனே இதை ட்விட்டை பார்த்த முதல்வர் படுவேகமாக நடவடிக்கை எடுத்தார். அதன் பின் அவருக்கு இப்படி பதில் அளித்தார்.
முதல்வர் அளித்த பதில் இதோ
“தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறேன்.
கண்டிப்பாக தம்பி. கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.”‘ இப்படி முதல்வர் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அதிரடியான நடவடிக்கை பார்த்து அந்த இளைஞர் நன்றி கூறினார்.
இதோ அந்த ட்வீட்