Monday, May 6, 2024
-- Advertisement--

திமுகவை சார்ந்தவர்கள் ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும் இந்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பான் சட்ட சபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மாஸ் பேச்சு.

சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தற்போது பேசி வருகிறார். தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்து வருகிறது. நேற்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கொண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

மூன்றாவது நாளான சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் என்னென்ன வேலைகள் செய்துள்ளது என்னென்ன நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பதை தெரியப்படுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சட்டப்பேரவை விட்டு வெளிநடப்பு செய்திருக்கிறார் மழை சட்டம் ஒழுங்கு பற்றி கூறியிருக்கிறார் மழை வெள்ளத்தை பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் அதிமுகவிற்கு இல்லை 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு தமிழ் மக்களை தவிக்கவிட்டனர். சென்னை தண்ணீரில் மிதந்தது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஸ்மார்ட்டாக சில வேலைகளை செய்து வந்தனர் அது மக்களுக்கு தெரியும் என்று கூறிய முதல்வர் சட்டம் ஒழுங்கை பற்றி அவர்கள் பேசுகிறார்கள் அவர்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கொடநாடு கொள்ளை வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று சொல்லிக்கண்டே போகலாம். குற்றங்கள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

இந்த அரசு அனைவருக்கும் பொதுவான அரசு எந்த ஒரு அம்மா உணவகம் மூடக் கூடாது என்பது தான் எனது எண்ணம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன் இன்று வரை அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன் நிச்சயம் இருப்பேன் இதில் எந்த மாற்றமும் இல்லை என்று பேசிய ஸ்டாலின் அதிமுகவின் திட்டங்களை முடக்குகிறேன் என்று கூறுகிறார்கள் கலைஞரின் எந்தெந்த திட்டங்களை அதிமுக அரசு முடக்கியது என்ன கூறுகிறேன் என்று சட்டசபையில் பட்டியலிட்டு விளக்கினார் முதலமைச்சர் ஸ்டாலின் .

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது திமுகவை சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்தால் ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டால் நிச்சயமாக உறுதியாக அண்ணா மீது ஆணையாக கலைஞர் மீது ஆணையாகச் சொல்கிறேன் இந்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பான் என்று தெரிவித்துள்ளார்.

LIVE:

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles