Thursday, May 2, 2024
-- Advertisement--

பள்ளி சீருடையுடன் தாத்தா ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த தமிழக முதல்வரின் பேரன் பேத்திகள்…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை அயராமல் மக்களுக்காக அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் எப்படி தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத எப்படி ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று யோசனைகள் செய்து சவாலான நேரத்தில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார்.

அதனைத் தொடர்ந்து 100 நாளில் குறை தீர்ப்போம் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் அதற்காக தனிப்பரிவு ஒன்றை ஏற்படுத்தி மக்கள் கொடுத்த மனுக்களை அளித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் பெரிய வரவேற்பைப் பெற்றது. மழை வெள்ள காலத்தில் களத்தில் இறங்கி மக்களை பார்வையிட்டு எந்தெந்த பகுதியில் நிலைமை மோசமாக இருக்கிறதோ அதனை சரி செய்ய உத்தரவிட்டார். சிறுவர் ஒருவர் தான் சேர்த்து வைத்திருந்த தொகையினை தமிழக அரசு நிதிக்கு அனுப்பியவுடன் நெகிழ்ந்து போன முக ஸ்டாலின் அவர்கள் அந்த சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்து அவருடன் தொலைபேசியில் உரையாடினார். அதுபோல தமிழ்நாட்டிலிருந்து எங்கு சாதனை செய்திருந்தாலும் அவர்களை நேரில் கூப்பிட்டு பாராட்டும் குணம் கொண்டவர்.

ஸ்டாலின் அவர்கள் என்னை நம்பி ஓட்டுப் போட்டவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் அதே சமயம் எனக்கு ஓட்டு போடாதவர்கள் ஓட்டு போட தவறி விட்டோமே என்று வருந்தும் அளவிற்கு ஆட்சி புரிவேன் என்று உறுதியளித்துள்ளார். சமீபத்தில் அப்துல் கலாம் என்ற சிறுவனின் பேச்சை கேட்டு நெகிழ்ந்த முதல்வர் வாடகை வீட்டில் வசித்து வந்த அவருக்கு தமிழக அரசு வீடு ஒன்றை வழங்கி அவர்கள் குடும்பத்தினர் தங்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தார். முன்பெல்லாம் ஆந்திர முதல்வர் கேரள முதல்வரைப் பற்றி எழுதி வந்த பத்திரிக்கைகள் தற்பொழுது தமிழக முதல்வரை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டனர் அந்த அளவிற்கு முதல்வராக என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாகச் செய்து வருகிறார் மு க ஸ்டாலின்.

இன்று மு க ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் இன்று காலையிலேயே தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் முதல்வர்.

மகன் மகள் மற்றும் மருமகன் பேரன் பேத்திகள் என்று அனைவரும் ஒன்றிணைந்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். பள்ளிக்கு செல்லும் முன் பள்ளி சீருடையுடன் தாத்தா ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றுள்ளனர் அவரது பேரன் பேத்திகள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles