Friday, May 3, 2024
-- Advertisement--

முதல்வர் ஆன பின் முதல் சைக்கிள் பயணம்..!!! மக்களுடன் செல்பி எடுத்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின். வீடியோ இதோ.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது உடலை பிட்னஸ் ஆக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வீட்டில் கூட மிக அளவான சாப்பாட்டை எடுத்துக் கொள்வாராம் உடல் மீது அதிக அக்கறை கொண்டவராம் ஸ்டாலின்.

காலை எழுந்தவுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் பயிற்சி செய்வாராம் ஸ்டாலின் இதனைப் பற்றி அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் ஒரு பேட்டியில் தெளிவாகக் கூறியிருந்தார்.

தமிழக முதல்வர் ஆவதற்கு முன்பு சைக்கிளில் சென்று மக்களை சந்தித்து வந்த ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் முதல் முறையாக மீண்டும் சைக்கிளிங் சென்று இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பிஸியான நேரத்திலும் தனது உடலை பார்த்துக் கொள்ள நேரம் ஒதுக்கி சைக்கிளிங் உடற்பயிற்சி செய்து வருகிறார் ஸ்டாலின். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் சைக்கிள் பயணம் செல்லும் ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது ஈசிஆர் சாலையில் கோவளத்தில் இருந்து மாபல்லபுரம் வரை சைக்கிளிங் உடற்பயிற்சி செய்தார்.

தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் இருப்பதால் மு க ஸ்டாலின் அவர்கள் சைக்கிளில் செல்லும் போது போலீசார் பின் தொடர்ந்து பாதுகாப்பு அளித்தனர். போகும் வழியில் சில மக்களை சந்தித்து செலஃபீ எடுத்து கொண்டார் முதல்வர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles