உலகெங்கும் கொரனோ வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. அனைத்து பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. அது போல இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் போன்ற சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பேருந்து சேவைகள் தொடங்கியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியிலும் பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செய்யாறு பேருந்து பணிமனையின் கீழ் பணிபுரியும் நடத்துனர்கள் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதனால் செய்யாறு பணிமனை பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்கு செய்யாறு பகுதியில் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.