Saturday, May 4, 2024
-- Advertisement--

பாஜகாவினரை அழைத்து கொண்டு முதல்வரின் தொகுதியில் BOATல் போட்டோஷூட் எடுத்த அண்ணாமலை..!!! அய்யா அரசியல் செய்ய நேரமா அய்யா இது நெட்டிசன்கள் புலம்பல்.

சென்னை முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருக்கிறது. அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொட்டும் மழையிலும் தங்களது வேலையை மக்களுக்காக செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் களத்தில் இறங்கி மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களை பார்வையிட்டு அதனை சரி செய்ய உத்தரவிட்டுள்ளார். மழைநீரால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்நிலையில் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் உணவு வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்காலிகமாக அம்மா உணவகத்தில் மூன்று வேளை உணவு பொதுமக்களுக்கு கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அரசு தனது பணியினை சிறப்பாக ஒரு பக்கம் செய்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் மற்ற கட்சியின் தலைவர்கள் தங்களது தொண்டர்கள் மற்றும் தொகுதிகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

மற்ற கட்சித் தலைவர்கள் தங்களது தொகுதிக்கு சென்று மக்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து அதற்காக கோரிக்கை வைத்து வருகிறார்கள் இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதிக்கு பாஜகவினரை அழைத்து சென்று அங்கு உள்ள குறைகளை கேட்டு வருகிறார். கொளத்தூர் தொகுதிக்கு சென்றது மட்டுமல்லாமல் அங்கே அவர் BOATல் செல்லும் புகைப்படங்கள் மற்றும் மழை நீரில் நிற்கும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒருவர் படகில் செல்வது வெட்கக்கேடானது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பத்து வருடங்களாக கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, பெரும்பாலோனோர் வீட்டில் மின்சாரம் இல்லை அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள் மக்கள். இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வு என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இது மக்கள் வாழ்விடமா அல்லது மழைக்கால ஏரியா இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக் கொள்பவர்கள் இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் அத்தியாவசியமான பொருட்களையும் வழங்கி வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தற்பொழுது அண்ணாமலையின் இந்த பதிவு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பல இடங்கள் மழை நீரில் மிதக்கையில் ஏன் அய்யா அங்க மட்டும் புகைப்படம் எடுத்து காட்டுறிங்க என புலம்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles