Monday, September 9, 2024
-- Advertisement--

பிச்சை எடுத்தாவது என் மக்களை காப்பற்றுவேன் என்று சொல்வார்கள்.!! ஆனால் இவரோ? குவியும் பாராட்டுக்கள்.!!

வறுமையால் வாடுபவர்களுக்கு பண உதவி பணக்காரர்கள் தருவார்கள். ஆனால் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒருவர் வறுமையால் வாடுபவர்களுக்கு பண உதவி அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல சம்பவம் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளளது உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் ஊரைச் சார்ந்தவர் பூல் பாண்டியன். இவர் கடந்த 40 ஆண்டுகளாக யாசகம் எடுத்து வருகிறார். அதாவது பிச்சை எடுத்து வருகிறார். இவர் கிடைக்கும் பணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார். இந்நிலையில் பள்ளிகளுக்கு நாற்காலிகள், மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்குவதற்கு இவர் யாசகம் பெற்றே பணத்தை வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் இவர் ஒரு இரண்டு வாரத்திற்கு முன்பு மதுரை வந்துள்ளார். அங்கு நடை பாதையில் தான் தங்கியுள்ளார். நடைபாதையில் இருப்பதை கண்டு தன்னார்வலர்கள் அவரை முகாமில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் சந்தை மற்றும் மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் இவர் யாசகம் செய்து சுமார் 10,000 வரை ஈட்டியுள்ளார். அந்த பத்தாயிரத்தையும் அப்படியே கொரனோ நிதி உதவிக்காக கொடுத்துள்ளார்.

தன் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் இவர், உண்ண உணவும் இருக்க இருப்பிடம் ஆகியவை போதுமானதாக இல்லாத போதும், மற்றவர்களுக்கு உதவும் இவருடைய பெரிய குணம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles