Saturday, April 27, 2024
-- Advertisement--

தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த மிக முக்கிய பிரமுகர்கள் யார் யார்?? விபரம் உள்ளே..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கவனம் ஈர்த்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன், நடிகை குஷ்பூ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட பலரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

மேலும் தோல்வி அடைந்த பிரபலங்களில் தேமுதிக கட்சித் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிடத்தக்கவை.விருத்தாச்சலம் தொகுதியில் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்திற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் முதன் முறையாக பங்கேற்ற நடிகர் கமல் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் காலை முதலே பரபரப்பான முன்னணியில் இருந்து இறுதியாக பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாஸ் இடம் தோல்வியடைந்தார். இறுதியாக மக்கள் நீதி மையம் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசன் கட்சி வேட்பாளர் ஸ்ரீபிரியா தோல்வி அடைந்துள்ளார்.


தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டது அதில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. திருவெற்றியூரில் களமிறங்கிய சீமானுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொருளாளர் டிடிவி தினகரனின் கோவில்பட்டி தொகுதியில தோல்வி அடைந்துள்ளார். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் பாஜக தலைவர் L.முருகன் மற்றும் காவல்துறை பதவியை ராஜினாமா செய்த கட்சியின் துணை பொது செயலாளர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles