தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளரான ஜிவி பிரகாஷ் சமீபத்தில் நிறைய படங்களில் கதாநாயகனாகவும் துணை நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் இன்னும் வெளிவராத படம் 4 ஜி.
இந்த படத்தின் இயக்குனர் அருண் பிரசாத் இந்த பட வேலைகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருந்தார்
ஊரடங்கு காரணமாக படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் அருண் பிரசாத் தனது சொந்த ஊரான கோவை சென்றிருந்த போது இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவருக்கு திரையுலக நண்பர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
