தமிழ் சினிமாவில் நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் நடிகர்கள் குறைவு சீயான் விக்ரம் பொறுத்தவரை படம் நடித்தோம் சம்பாரித்தோம் என்று இல்லாமல் தன்னை திரையில் காண வரும் ரசிகர்களுக்காக தன்னையே வருத்தி அவரது படங்களில் நடித்து இருப்பார். நடிகராக இருந்து கொண்டு பல சகநடிகர்களுக்காக குரல் கொடுத்தவர். தல அஜித்தின் முதல் படமான “அமராவதி” என்ற படத்திற்கு இவர் தான் அஜித்துக்கு டப்பிங் பேசினார்.
இவர் சினிமா துறையில் சந்திக்காத தோல்விகளும் இல்லை காணாத வெற்றியும் இல்லை. சேதுவில் தனது நடிப்பை திரும்பி பார்க்க வைத்த விக்ரம் இப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு தனது நடிப்பால் உயர்ந்தார். கமெர்ஷியல் படம் என்றாலும் சரி, சப்ஜெக்ட் சார்ந்த படம் என்றாலும் சரி மனிதன் தன்னை முழுதாக அர்ப்பணித்து நடித்து கொடுப்பார் அந்த அளவுக்கு செய்யும் தொழிலை மதிப்பவர் அதற்கு சான்று சேது, பிதாமகன் , அந்நியன், ஐ போன்ற படங்களே போதும்.
“ஐ” படத்திற்காக தன்னை வருத்தி கொண்டு விக்ரம் நடித்த வீடியோ இதோ
தொழிலை மதிக்கும் அளவிற்கு ரசிகர்களை நேசிக்கும் விக்ரம்
ரசிகர் ஒருவர் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விக்ரமை பார்த்து சந்தோஷத்தில் ஓடி வந்து செல்பி எடுக்க முயன்றார். அப்பொழுது அங்கு உள்ள பாதுகாவலர்கள் அந்த ரசிகரை தர தர என இழுத்து கொண்டு செல்ல முயன்றார்கள். அதை பார்த்த விக்ரம் தனது இருக்கையில் இருந்து எழுந்து அந்த ரசிகரை கூப்பிட்டு செல்பி அவரே எடுத்தார். உடனே சந்தோஷத்தில் அந்த ரசிகர் விக்ரம் அவர்களுக்கு அன்பு முத்தங்களை கொடுத்தார். இந்த சம்பவம் அந்த அரங்கில் இருந்தவர்களை வியக்க வைத்தது. இப்படியும் ஒரு நடிகர் ரசிகனை நேசிக்கிறாரே என்று பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீயான் விக்ரம் அவர்களுக்கு எங்களது 24x7tamil.com தளத்தின் வாழ்த்துக்கள்.