ரிச்சா கங்கோபாத்யாய் டெல்லியில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் MBA படித்து முடித்தார். அதன் பின் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு வந்தது. “லீடர்” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் சந்திரமுகி ரீமேக் ஆன “நாகவல்லி” என்ற தெலுங்கு படத்தில் சந்திரமுகியாக நடித்தார்.
அதன் பின் தான் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுடன் ஜோடியாக ” மயக்கம் என்ன” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவருடைய கதாபத்திரம் ஒரு துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. தனுஷின் மனைவியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரிச்சா.
அதன் பின் தமிழில் “ஒஸ்தி” என்ற சிம்பு படத்தில் நடித்தார். தற்பொழுது அவர் அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் தெலுங்கு ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “உங்களுக்கு எந்த தெலுங்கு படத்தில் நடித்தது பிடித்து இருந்தது என்ற கேள்விக்கு ஒரே பதிலுக்காக “மயக்கம் என்ன” படம் தான் பிடித்தது” என்று பதில் அளித்தார்.
இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிச்சா ஒரு பெரிய போட்டு ஒன்றை நெற்றியில் வைத்து கொண்டு ஹோம்லி லுக்கில் ரசிகர்களுக்கு வாழ்த்தினை கூறியுள்ளார்.