Monday, May 6, 2024
-- Advertisement--

பொது இடத்தில் இப்படி ஒரு டிரஸ் போட்டு கொண்டு ஷாப்பிங் போகணுமா..!!! வெளியான புகைப்படங்கள்.

தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் இவரும் ஒருவர். கல்லூரி என்ற படத்தில் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகள் பட்டியலில் இவரும் இருக்கிறார். 30 வயதாகும் தமன்னா எப்படியாவது பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக ஆக வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறார்.

தமிழில் இவருக்கென்று ஒரு மார்க்கெட் இருந்தாலும் தமன்னாவை அதிகம் விரும்புவோர் தெலுங்கு ரசிகர்கள் தான். அதற்கு காரணம் தமன்னாவின் தாராள குணம் தான்.

தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி தனது மார்க்கெட்டை என்றும் தக்க வைத்துள்ளார். தெலுங்கு படங்களில் தாராளம் காட்டுவதால் தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் தமன்னாவின் கால்ஷீட்டை முன்பே வாங்கிவிடுவார்கள்.

தமிழ் படமான விஷால் நடித்த கத்தி சண்டை என்ற படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் இயக்குனர் சுராஜ் பேட்டி ஒன்றில் தமன்னாவை வைத்துக்கொண்டு புடவை கட்டி நடிக்க வைத்தால் பார்ப்பார்களா. அதனால் தான் துணிகளின் அளவை குறைத்தேன் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமன்னா தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தமிழ் படங்களில் கிளாமரில் குறைத்துக்கொண்டு தமன்னா தற்போது ஹிந்தி படங்களை நோக்கி டார்கெட் செய்து வருகிறார். எல்லா நடிகைகளும் ஹிந்தி பட வாய்ப்பை பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். கொஞ்சம் வளர்ந்தவுடன் உடன் ஹிந்தி ஹீரோக்களை நண்பர்களாக்கி அவர்கள் மூலம் படவாய்ப்புகள் பெற்ற நடிகைகள் அதிகம்.

சமீபத்தில் தமன்னா டீ சர்ட் ஒன்று அணிந்து சிறிய ஷாட்ஸ் ஒன்றை மாற்றிக்கொண்டு பொது இடத்தில் ஷாப்பிங் போகும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உடை அணிவது அவரவர் இஷ்டம் ஆனால் பொது இடங்களில் இது போல உடைகளை அணிய வேண்டாமே என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

tamanna in public place

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles